வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: திங்கள், 2 பிப்ரவரி 2026 (17:40 IST)

AK64 படத்தை தயாரிக்கப்போவது இவரா?!.. ஆனா ஒரு கண்டிஷன்!...

ajith
கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித்குமார் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.. எனவே அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதேநேரம் இந்த படத்தை படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

அஜித் தனக்கு 185 கோடி சம்பளம் கேட்டதால் தமிழ்நாட்டில் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முடியாது என சொல்லி. எல்லோரும் கதவை சாத்திவிட்டனர். எனவே மும்பை சென்று அங்குள்ள தயாரிப்பாளர்களை தேடினார்கள்.. இந்நிலையில்தான் மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது..

அதேநேரம், அந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கிய கண்டிஷனை போட்டிருக்கிறது.. 100 கோடி சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள்.. மேலும் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என பேசியிருக்கிறதாம்.. வேறு எந்த தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பதால் அஜித் இதற்கு ஒப்பு கொண்டதாக தெரிகிறது.