ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:18 IST)

108 MP ட்ரிபிள் கேமராவுடன்.. பட்ஜெட் விலையில்..! - Infinix Note 40X 5G அதிரடி அறிமுகம்!

Infinix 5G Smartphones

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது அதிக மெகா பிக்சல் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

 

 

இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இன்பினிக்ஸ் நிறுவனமும் ஒன்று தற்போது இன்பினிக்ஸ் தனது பட்ஜெட் விலையிலான அதிக கேமரா தரம் கொண்ட Infinix Note 40X 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் ப்ரைமரி கேமரா 108 எம்பி குவாலிட்டி கொண்டது என்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

 

Infinix Note 40X 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 8 ஜிபி / 12 ஜிபி RAM + விர்ச்சுவல் ரேம்
  • 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்ட் ஸ்லாட்
  • 108 எம்பி + 2 எம்பி+ விஜிஏ ட்ரிபிள் ப்ரைமரி கேமரா
  • 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5ஜி, சைட் பிங்கர் ப்ரிண்ட் சென்சார், வைஃபை,
  • 5000 mAh பேட்டரி திறன், 18 W பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Infinix Note 40X 5G ஸ்மார்ட்போன் ஒப்சிடியன் ப்ளாக், டைட்டன் கோல்ட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை வங்கி சலுகைகள் உட்பட 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.13,499 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் ரூ.14,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 9 முதல் தொடங்கப்பட உள்ளது.

 

Edit by Prasanth.K