புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By VM
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (11:26 IST)

அசுரனாக இருந்த ஏர்டெல்லுக்கு ஒரே மாதத்தில் இப்படியோ ஒரு அதிர்ச்சியா?

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த டிசம்பர் மாதம் மட்டும்   5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.



டிசம்பர் மாதம் முடிவில் ஏர்டெல் நிறுவனம் 28.42 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தது.
 
இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நவம்பர் மாதத்துக்கான தகவல்கள் கொண்ட அறிக்கையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மட்டும்  5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கக்கூடும் என தெரிகிறது.
 
ஏர்டெல் நிறுவனம் திடீரென அறிவித்த   இன்கமிங் கால்களுக்கும் காசு என்று அறிவித்த திட்டமே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.