நாங்களும் ஆஃபர் கொடுப்போம்ல... அள்ளிவிடும் வோடபோன்

Vodafone
Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (14:59 IST)
வோடபோன் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு போட்டியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட வேலிடிட்ட கொண்ட ஆஃபரையும், 3 டாப் அப் ரீசார்ஜ் சலுகையையும் அறிவித்துள்ளது. 
 
ரூ.1,699 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. வோடபோனின் இந்த சலுகை மற்றும் ஜியோவின் ரூ.1,699 சலுகைகளுக்கு போட்டியாக கருதப்படுகிறது. 
 
மேலும், மூன்று புதிய டாப் அப் ரீசார்ஜ்களையும் அறிவித்துள்ளது. ரூ.50 விலையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39.7 டாக்டைம் வழங்கப்படுகிறது. மற்ற இரு சலுகைகளின் விலை ரூ.100 மற்றும் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
ரூ.100 மற்றும் ரூ.500 என்ற இரு சலுகைகளில் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :