5 கோடி பேஸ்புக் தகவல்கள் திருட்டு - அதில் நீங்களும் இருக்கலாம்
முகநூல் பக்கத்தில் உள்ள 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 4 கோடி பேரின் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் முகநூல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் பலரும் பயனபடுத்தும் முகநூலை அடிக்கடி ஹேக்கர்ஸ் கையில் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பலரின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது மேலும் 5 கோடி பேரின் தகவல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக முகநூல் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதோடு, 4 கோடி பேரின் முகநூல் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) வசதியை பயன்படுத்தி ஹேக்கர்ஸ் தகவல்களை திருடியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டு, தற்போது அதை சரி செய்யும் பணியில் முகநூல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை துறை துணை தலைவர் கய் ரோஷன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த செய்தி முகநூல் பயன்படுத்தும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.