1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (11:34 IST)

ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு ரூ.542 கோடி! இலவசமாக டீசரை பார்க்க ஷங்கர் ஏற்பாடு

ரஜினிகாந்த் அக்ஷயக்குமார் நடித்துள்ள ‘2.0’ படம் ரூ.542 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த எந்திரன்’ படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகமாக ‘2.0’  எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு  வருடத்துக்கு முன்பே முடிந்து  கிராபிஸ் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர்.  நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். 
 
இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும்  என்றும் அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார்.
 
மேலும், படத்தின் டீசரை இலவசமாக பார்க்க பி.வி.ஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9099949466 என்ற எண்ணிற்கு  மிஸ்டு கால் கொடுத்தால் டீசரை இலவசமாக பார்க்கும் விதமாக வசதி அமைத்து தரப்படும் என அவர் கூறியுள்ளார். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
இதற்கிடையே 2.0 படம்ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட  படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 
 
இந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம் ஆகும். இதனால் வியந்து போன ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். இயக்குனர்  ‌ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.