வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (11:56 IST)

2019 ஆம் ஆண்டில் நடக்கக் காத்திருக்கும் சைபர் அத்துமீறல்கள்

வரும் 2019 ஆம் புத்தாண்டில் உலகம் எதிர் கொள்ள இருக்கும் இணையத்தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
சமீபத்திய காலாண்டுகளில் உயர்மட்ட இணையச் செயலிழப்பு நிகழ்வுகள் அசாதரணமாக நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் யாஹூ நிறுவனத்திற்கு எதிராக அத்துமீறிய இணைய ஊடுருவலின் மூலம் மட்டுமே 500 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பல வருட திருட்டுகளின் மூலம் மாரியாரட் இண்டர்நேஷனல் / ஸ்டார்ட் நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வுகளின் மூலம் இணைய ஊடுருவாளர்கள் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் அத்துமீறல்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையா ?
 
அந்தக் கேள்விக்கு நாம் ஐயமின்றி ஆம் எனதான் பதில் கூறவேண்டும். பல ஆண்டுகளாக இணைய செயலிழப்புகள் பொருளாதாரத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளாக இருந்து வருகின்றன.  ஆனால் வரப்போகும் புத்தாண்டில் இந்த செயல்பாடுகள் இன்னும் அதிகமாகும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
 
இதனால் நிறுவனங்கள் கூடுதலான செயல்திறனுக்காவும், செலவினங்களையும் குறைப்பதற்காகவும் தரவு சார்ந்த வணிகங்களை தொடங்கியுள்ளனர்.அதே நேரத்தில் புதிய இலக்கு மண்டலங்களை கட்டமைத்து வருகின்றனர்.  இணையப் பொருளாதாரம் விரிவாக வளர்ந்து வரும் அதே நேரத்தில் அதன் மூலம் இணைய அத்துமீறிய ஊடுருவலும் அதிகமாகி வருகிறது. இதனால் ஹேக்கர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களின் மூலம் ஊடுருவலை ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
 
மனிதர்களோடு உரையாடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள சாட்போட்களைக் கொண்டு இணைய அத்து மீறல் குற்றங்களையும் சைபர் அட்டாக்குகளையும் நிகழ்த்தி வருகின்றனர். அதே நேரத்தில் வளர்ந்து வரும் க்ரிப்டோஜாக்கெட்டிங் மூலம் பயணாளர்களிடமிருந்து தகவல்களை இணையதளங்களின் மூலம் திருடுவதும் அதிகமாகி உள்ளது.
 
இதுமட்டுமல்லாமல் மென்பொருள் தாக்கத்தில் கணிசமான அதிகரிப்பு, தாக்குதலுக்கு டெவெலப்பர்கள் குறிப்பிட்ட இலக்கு மற்றும் மென்பொருள் மேம்படுத்தும் சங்கிலி தொடர் தாக்குதல்களின் பெருக்கம் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.
 
வரும் காலத்தில் அச்சுறுத்தல் அளிக்கும் சில காரணிகள் குறித்த அறிமுகம்
 
செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்பாட்களின் தோற்றம் 
 
புத்தாண்டில் சைபர் கிரைமில் ஈடுபடுவர்களும் ஹேக்கர்ஸ்களும் தவறாக எழுதப்பட்ட சாட்பாட்களை வடிவமைத்து பரப்புவர். இதன் மூலம் பயனர்கள் சுட்டும் லிங்குகளின் மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருட ஆரம்பிப்பர். முறையாக அனுமதிக்கப்பட்ட இணையதளங்களிலும் இந்த சாட்பாட்ஸ்கள் நுழைந்து பயனர்களை தவறாக வழிநடத்தும்.
 
பொருளாதாரத்தை வலுவிழக்க செய்யும் நகரங்களின் மீதான தாக்குதல்
 
ஹேக்கர்கள் புதிய கருவிகளின் மூலம் கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்வது, தகவல்களின் மீது தாக்குதல் நடத்துவது, ஹார்ட்வேர் உபகரணங்களைத் தாக்கி மாற்றம் செய்ய வைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவர். இது முக்கியமாக் தீவிரவாதிகளின் முக்கியக்குறிக்கோளாக இருக்கும்.
 
வளர்ந்து வரும் தகவல் ஆயுதங்கள்
 
பயனர்கள் தாங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அடையும் நன்மைகள் குறித்துக் கேள்விக் கேட்க ஆரம்பித்துள்ளானர். சமூக வலைதளங்களில் தங்கள் தகவலைக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பது குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் தங்கள் தகவல்களை திருடும் போக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
மென்பொருள் கட்டுமானம் மற்றும் மென்பொருள் புத்துருவாக்கத்தைக் கவிழ்த்தல் 
 
ஏதேனும் ஒரு மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்யும் போது அதற்குள் மால்வேர் சாப்வேர்களை புகுத்தி ஹேக் செய்தல் . இந்த முறையிலான ஹேக்கிங் 2016 ஆம் ஆணிடில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
செயற்கைக்கோள்களின் மீதான சைபர் அட்டாக்
 
சிமெண்டக் எனும் ஆன்ட்டி வைரஸ் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின் படி தென்கிழக்கு ஆசியாவில் செயற்கைக்கோள்களின் மீது  தாக்குதல் சென்ற ஆண்டே ஆரம்பமாகி விட்டதாக அறிவித்துள்ளது.  சீனாவின் பாதுகாப்புத் துறை செயற்கைக் கோள ஒன்று சென்ற ஆண்டு தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 
ராணுவம், கப்பல் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை இணையதளத்தோடு இணைக்கும் செய்ற்கைக் கோள்கள் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் வருங்காலத்தில் இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.