Daily Horoscope

பிளே ஆப் சுற்று செல்ல மும்பைக்கு வாய்ப்பு உள்ளதா?

Written By siva
Updated: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (07:43 IST)
ஐபிஎல் தொடர் போட்டியில் நேற்று நடந்த முக்கிய போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிக அபாரமான வெற்றி பெற்றதால் பிளே ஆப் சுற்றில் உறுதியாக நுழைந்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது.
 
இந்த போட்டியில் நேற்று எதிர்பார்த்தது போலவே கொல்கத்தா அணி மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதும் அவ்வாறு வென்றால் மட்டுமே மும்பையில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிளே ஆப் சுற்றில் நுழைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் கொல்கத்தா அணி 0.587 என்ற ரன்ரேட்டை வைத்துள்ளதால் மைனஸ் ரன்ரெட்டில் இருக்கும் மும்பை அணியின் ரன்ரேட்டில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments