மகளுடன் தமிழில் பேசும் தோனி! வைரலாகும் கியூட் வீடியோ!
தல தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது செல்ல மகள் ஸிவாவிடம் கேள்வி கேட்க அதற்கு ஸிவா பதிலளிக்கும் கியூட் வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தோனி ஸிவாவிடம் “எப்படி இருக்கீங்க?” என கேட்க, அதற்கு மழலை குரலில் “நல்லா இருக்கேன்” என ஸிவா பதிலளிக்கிறார். மேலும், இன்னும் 6 மொழிகளில் தோனி தனது மகளிடம் கேள்வி கேட்க, அதற்கு அவரது மகள் க்யூட்டாக அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார். இந்த வீடியோவை தல தோனி "ஐபிஎல் போட்டிகளுக்கிடையே, மகளுடன் மொழிப் பயிற்சி " என கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அனைத்து சமூகவலைத்தளங்களில் செம்ம வைரலாகி வருகிறது .