1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மே 2022 (13:03 IST)

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்!!

ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது.

 
ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.  பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியை தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. அந்த டிவீட்டில், எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது குடும்பத்தில் புதிதாக இணைய இருக்கும் உறுப்பினருக்காக நியூசிலாந்திற்கு மீண்டும் பறக்கிறார். கேன் வில்லியம்சன் மனைவியின் சுகப்பிரசவத்துக்காகவும் பாதுகாப்புகாகவும் வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளனர்.