1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (15:42 IST)

நடக்குமா.. நடக்காதா.. ஐபிஎல் 2020 தலைவிதி தான் என்ன?

ஐபிஎல் தலைவிதி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னரே தெரியவரும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்படது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்திலாவது அல்லது வெளிநாடுகளில் வைத்தாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிந்தது. 
 
மேலும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஐபிஎல் குறித்து பதில் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது... 
 
ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்றவாறு ஐபிஎல் குறித்து முடிவெடுக்கப்படும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒலிம்பிக் விளையாட்டுகளை போலவே பார்க்கிறது. ஆனால், இப்போது மக்களை விட விளையாட்டு முக்கிமில்லை என தெரிவித்துள்ளார்.