Daily Horoscope
✕

'தல' மேட்ச்சை பார்க்க வந்த தனுஷ்!

Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (21:11 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், கொல்கத்தா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வருகை தந்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தனது மகனுடன் தனுஷ் வந்துள்ளார் என்பதும் தனுஷின் மகன் சிஎஸ்கே அணியின் கலரான மஞ்சள் உடையில் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் சென்னை வெல்ல வேண்டும் என்று பெருபாலான சினிமா நட்சத்திரங்கள் டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் நிலையில் போட்டியை நேரில் பார்க்க தனுஷ் வந்துள்ளார். தனுஷை அவரது ரசிகர்கள் மைதானத்தில் வரவேற்றனர்.

எல்லாம் காட்டு

இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. ரச்சின் ரவீந்திரா டக் அவுட்.. இந்திய பொளலர்கள் அபாரம்...

மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வரும் பென் ஸ்டோக்ஸ்... சிஎஸ்கே மீண்டும் ஏலம் எடுக்குமா?

52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்...

நிதானமான விளையாடும் ருத்ராஜ்.. கேப்டனை மாற்ற சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை...

இந்திய பவுலர்களுக்கு விக்கெட் விழவே இல்லை.. போராடி டிரா செய்த நியூசிலாந்து..

அடுத்த கட்டுரையில்
Show comments