புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2019 (21:20 IST)

இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இழக்க கூடாததை இழந்த தனுஷ்

நடிகர் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, துரை செந்தில் குமார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் அவரை கண்டித்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் குறிப்பிட்டி இருப்பது பின்வருமாறு, 
 
இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ஒரு ரசிகர் மன்றமா? ஆரம்பத்தில் வந்த பல அவமானங்களை தாண்டி நின்றவர்கள் நாங்கள்! ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்!!
 
பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள்! என் ரசிகர்கள்!! என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன்! என்று சொன்னாயே தலைவா!! ஆனால், உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா? 
நாங்களா? உங்களை தனுஷ்-காக கட் அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்ய சொன்னோம் எனறு ஆணவத்தோடு பேசிய டச் அப்மேன் எச்ச ராஜா மீது நடவடிக்கை எடு! 
 
தலைவன் தனுஷ்! நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா! என சொல்ல வைத்துவிடாதீர்கள்… நீங்கள் மறந்தால், போராட்டம் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில் தனுஷ் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.