1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (19:34 IST)

டாஸ் வென்ற தல தோனி: பேட்டிங் செய்ய அதிரடி முடிவு

இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ள நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 
 
இன்றைய சென்னை அணியில் வாட்சன், முரளிவிஜய், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயுடு, பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சஹார், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்றைய மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, பொல்லார்டு, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா மற்றும் மலிங்கா உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி  நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது