182 இலக்கு கொடுத்த சன் ரைசஸ்: 2வது ஓவரில் விக்கெட்டை இழந்த கொல்கத்தா
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் இரண்டாம் போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 53 பந்துகளில் 85 ரன்களும், பெயர்ஸ்டோ 39 ரன்களும் எடுத்தனர். மேலும் தமிழக வீரர் விஜய்சங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தா தரப்பில் ரசல் 2 விக்கெட்டுக்களையும் சாவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சற்றுமுன் கொல்கத்தா 182 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. கொல்கத்தா அணி 2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தாவின் லின் 7 ரன்களுக்கு அவுட் ஆனார்.