திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (16:31 IST)

ஐபிஎல் 2017: சோனி சேனலின் ஏற்பாடுகள்!!

ஐபிஎல் போட்டிகளை தமிழ் வர்ணனையில் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்துள்ளது சோனி நெட்வொர்க் சேனல். 


 
 
ஆண்டுதோறும் நடைபெறும் 10 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளை சோனி நெட்வொர்க் சேனல்கள் ஒளிபரப்பு செய்ய உள்ளன. 
 
ஆங்கில வர்ணனையுடன் போட்டியை ரசிக்க சோனி சிக்ஸ் சேனல் ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரம், தமிழ், தெலுங்கு, வங்காளம் மற்றும் ஹிந்தி மொழி வர்ணனைகள் சோனி ஈஎஸ்பிஎன் சேனலில் ஒளிபரப்பாகிறது. கன்னடத்தில் வர்ணனை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.