உலகத்துலேயே இந்த 12 தியேட்டர்களில் மட்டும்தான் ஒரிஜினல் Dune 2 பார்க்க முடியும்! – ஏன் தெரியுமா?
உலகம் முழுவதும் டுயூன் 2 திரைப்படம் வெளியாகியிருந்தாலும் குறிப்பிட்ட 12 தியேட்டர்கள் மட்டும் இந்த படத்தை வெளியிடுவதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
ஆங்கிலத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியரான ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய நாவல் டுயூன். இந்த நாவலை டெனிஸ் விலெனுவெ இயக்கத்தில் டிமோதி சாலமட், ரெபேக்கா பர்குசன், ஸெண்டாயா, ஜேசன் மாமோ உள்ளிட்ட பலர் நடித்து 2021ல் படமாக வெளியானது. உலகளாவிய அரசியலை உள்ளீடாக கொண்ட கற்பனை கதையான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இதன் இரண்டாம் பாகமான Dune 2 உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தியாவில் நான்கு நாட்களில் 13 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1515 கோடி வசூல் செய்துள்ளது.
முழுவதும் ஐமேக்ஸ் கேமராவிலேயே ஷூட்டிங் செய்யப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் சாதாரண தியேட்டர்கள் மற்றும் 800+ ஐமேக்ஸ் தியேட்டர்களில் அதற்கேற்றவாறு கன்வெர்ட் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. நவீன டிஜிட்டல் முறையிலேயே அனைத்துக் காட்சிகளும் திரையிடப்பட்டு வந்தாலும் உலகிலேயே 12 தியேட்டர்களில் மட்டும் இந்த படம் ஐமேக்ஸ் பிலிம் ரோல்களில் திரையிடப்படுகிறது.
ஐமேக்ஸ் 70 எம்.எம் ஃபார்மெட்டில் பிலிம் ரோலில் திரையிடப்படும் படம் அதே படத்தின் டிஜிட்டல் காப்பியை விட உயர்வான தரமும், காட்சிகளும் கொண்டதாக இருக்கும் என திரை ரசிகர்கள் கூறுகின்றன. இந்த 12 தியேட்டர்களில் அமெரிக்காவில் மட்டுமே 9 ஐமேக்ஸ் பிலிம் திரையரங்குகள் உள்ளன. கனடா, லண்டன், ஆஸ்திரேலியாவில் தலா 1 திரையரங்கு உள்ளது. இந்தியாவில் இந்த வகை திரையரங்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K