வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (19:48 IST)

விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக நுழைந்த நபரால் பரபரப்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் ஒரு நபர் நிர்வாணமாக    நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்- ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த ஒரு நபர் நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

அவர் அங்கு உலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து சென்றனர்.

விமான நிலைய முதலாவது முனையத்தின் சென் இன் வழியாக சென்ற அவரி டி.எஸ்.ஏ பாதுகாப்பு பாதை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது தடை செய்யப்பட்ட அறைக்குள் நுழைய முயன்ற அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம்  போலீஸார் நடத்திய விசாரணையில்  அந்த  நபரின் பெயர் மார்டின் எவ்டிமோவ் (56 வயது)  என்பதும் அவர் குடிபோதையில் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.