வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (20:20 IST)

''விடாமுயற்சி'' பட தாமதத்திற்கு இதுதான் காரணம்?

அஜித், திரிஷா உள்ளிட்டோர்  நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா  நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் விடாமுயற்சி.
 
இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில்,  விடாமுயற்சி படத்தில் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், விடாமுயற்சி படக்குழு ஷூட்டிங் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என தெரியவில்லை.  இதற்குக் காரணம் லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதே காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம் படமும் கவலையான விமர்சனம் பெற்று வசூல் குறைந்ததும் இதற்குக் காரணம  என தகவல் வெளியாகிறது.
 
ஏனென்றால் அஜித் படத்திற்கு நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்பதால் நிதி நிலைமை சீரானதும் லைகா இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடங்கும் எனவும்  அஜர்பைஜானை தொடர்ந்து, ஜார்ஜியாவில் இப்பட ஷூட்டிங் தொடங்கலாம் என தகவல் வெளியாகிறது.