Daily Horoscope
✕

வீட்டில் செல்வம் பெருக இதை செய்தாலே போதும்...!

Updated: சனி, 17 பிப்ரவரி 2018 (13:29 IST)
 
மாதச்சம்பளம், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகை பூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். அப்போது பணம் பற்றாக்குறை நீங்கி செல்வம் பெருகும்.
 
தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
 
சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில்  முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

அடுத்த கட்டுரையில்
Show comments