திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

சிவனருள் கிடைக்க மகா சிவராத்திரி விரதம்

ஆண்கள் பொருள்தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில்  ஒருநாள் முழுவதும் ஆறுகால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்குக் கிடைக்கும். அதனால் தான் ஆண்களுக்கு “சிவராத்திரி” விரதம் சிறப்பான பலனைக் கொடுக்கின்றது.
சிவபிரான், சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் ஒரு நாழிகை, லிங்கத்தில் தோன்றியருளினார் என்பதாலேயே அன்று இரவெல்லாம் கண் விழித்திருந்து  பூஜை செய்வார்கள்.
 
சிவராத்திரியன்று ஒவ்வொரு ஜாமத்திலும் ஒவ்வொரு அலங்காரமும், விதவிதமான அபிஷேகங்களும் செய்யப்படுகிறது. குறிப்பாக முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அவிஷேகம், வில்வ அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாற்சாதம் நிவேதனம், செம்பட்டு போர்த்தப்பட்டு, சிவபுராணம், ரிக் வேதம் தோத்திரம் பாடப்படுகிறது. பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம் மணம் கமிழ, சாம்பிராணி, சந்தனக்கட்டை புகை போடப்பட்டு தீபாராதனை நடக்கிறது.
 
2-வது ஜாமத்தில் பஞ்சாமிர்தம் அபிஷேகம், குருத்தை அலங்காரம், துளசி அர்ச்சனையும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும், மஞ்சள் பட்டு போர்த்தப்பட்டும், யஜூர் தேவம், கீர்த்தித் திருவகவல் தோத்திரமும், அகில், சந்தனம் மணம், சாம்பிராணி, குங்குமம் புகை போடப்படுகிறது.
 
3-வது ஜாமத்தில் தேன் அபிஷேகமும், மூன்று இதழ் வில்வமும், ஜாதி மலர் அர்ச்சனையும், என் அன்னம் நிவேதனமும், வெண்பட்டு போர்த்தப்பட்டு, சாமதேவம், திருவ்ண்டப்பகுதி தோத்திரமும், கஸ்தூரி சேர்ந்த சந்தானம் மணம், மேகம், கருங்குங்கிலியும் புகை போடப்பட்டு, ஐந்து முக தீபாராதனை நடக்கிறது.
 
4-வது ஜாமத்தில் கருப்பஞ்சாறு, வாசனை நீர் அபிஷேகமும், கருநொச்சி அலங்காரம், நந்தியாவட்டை அர்ச்சனையும், வெண்சாதம் நிவேதனமும், நீலப்பட்டு போர்த்தப்பட்டு, அதர்வன வேதம், போற்றித் திருவகவல் தோத்திரம் பாடப்பட்டு, புணுகு சேர்ந்த சந்தனம் மணம் பரப்பப்பட்டு, கற்பூரம், இலவங்கம் புகை போடப்பட்டு மூன்று முக தீபம் ஏற்றப்படுகிறது.
 
முறையாக விரதம் இருந்து பூஜை செய்தால் சிவனருள் கிடைக்கும் எல்லா சவுபாக்கியங்களையும் அடையலாம் என்பது நம்பிக்கையாகும்.