விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் உண்டு தெரியுமா!
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்.
விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
* கணபதி - தேங்காய் எண்ணெய்.
* நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்.
* மகாலட்சுமி - பசுநெய்.
* குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்.
* ருத்திரர் - இலுப்பெண்ணெய்.
* பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்.
எந்த எண்ணெய்யில் விளக்கேற்றுவது நல்லது. அப்படி ஏற்றுவதால் உண்டாகும் பயன்கள்:
* விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்.
* பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
* நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது.
* ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
* இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.
* கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.