1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (18:10 IST)

நாளை முதல் 5 நாட்கள் சபரிமலை நடை திறப்பு.. பக்தர்கள் குவிய வாய்ப்பு..!

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நாளை ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் என்றும்  நாளை முதல் ஐந்து நாட்கள் ஐயப்பன் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் இருபதாம் தேதி வரை ஐயப்பன் கோவில் தரிசனம் செய்யலாம் என்றும் உச்ச பூஜை தீபாரதனைக்கு உட்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திருவிதாங்கோ தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
எனவே நாளை முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து தரிசனம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran