வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (19:14 IST)

ஜூன் 17ஆம் தேதி அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

sathuragiri
வரும் 17ஆம் தேதி ஆனி அமாவாசை மற்றும் நாளை பிரதோஷம் ஆகிய விசேஷங்களை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரிக்கு பக்தர்கள் மலையேறி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்  மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் இரவில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அனுமதி வழங்கப்பட்ட நான்கு நாட்களில் மழை வரும் அறிகுறி இருந்தால் பக்தர்கள் அனுமதி தடை செய்யப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது. 
 
ஆனி, ஆடி ஆகிய இரு மாதங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார் வருவார்கள் என்பதால் தண்ணீர் உள்பட வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran