திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By J.Durai
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (13:00 IST)

திடியன் கைலாசநாதர் கோவிலில் மகா தீபம்! – பக்தர்கள் கோஷமிட்டு வழிபாடு!

Kailasanadar temple
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் திருக்கோவிலின் 2000 அடி உயரம் கொண்ட திடியன் மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.,


 
கார்த்திகை தீப திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து சுமார் 2000 ஆயிரம் அடி உயரத்தில் திடியன் மலையில் அமைந்துள்ள தங்கமலை ராமன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மலை உச்சியில் கார்த்திகை தீப பீடத்தில் சுமார் 200 மீட்டர் துணி, 170 கிலோ நெய் கொண்டு தயார் செய்யப்பட்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் ஏற்றும் நிகழ்வின் போது உசிலம்பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் மலை ஏறி அரோகரா மற்றும் கோவிந்தா கோசம் எழுப்பி தீப தரிசனம் செய்தனர்.