செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (11:12 IST)

திருக்கார்த்திகை சிறப்புகள்: தீபத்தின் வகைகளும் அதன் சிறப்புகளும்!

Oils - Deepam
திருக்கார்த்திகைக்கு ஏற்றப்படும் தீபங்களில் வீடுகள் தொடங்கி கோவில்கள் வரை பல்வேறு வகையான தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இந்த தீபங்கள் ஒவ்வொன்றும் தனி சிறப்புகளை கொண்டவை. அவை குறித்து தெரிந்து கொள்வோம்.



தீபம் மகாலட்சுமி குடியிருக்கும் அம்சம். வீடு வாசல்களில் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வைத்தல் மகாலட்சுமி வாசம் செய்வார் என்பது ஐதீகம். தீபங்களில் பல வைகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில தீப வகைகளையும் அதன் சிறப்புகளையும் காணலாம்.

மாலா தீபம் – அடுக்கடுக்கான தட்டுகள் கொண்ட அடுக்கில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

ஆகாச தீபம் – வீட்டின் வெளிப்பகுதியில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவது ஆகாச தீபம். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது.

ஜல தீபம் – வாழை மட்டை அல்லது வெற்றிலையில் எலுமிச்சை கொண்டு தீபம் ஏற்றி நீர்நிலைகளில் விடுவது ஜலதீபம். ஆடிப்பெருக்கில் காவிரி ஆற்றில் ஜலதீபம் ஏற்றுவது உண்டு. இது உயிர் ஆதாரமான நீரை வணக்கும் பொருட்டு ஏற்றப்படும் தீபம்.

சர்வ தீபம் – மாலை வேளையில் வீட்டை சுற்றிலும் வைக்கப்படும் தீபம் சர்வ தீபம் எனப்படும். இது கெடுவினைகள் இல்லங்களை அண்டாமல் பாதுகாக்கும்.



மோட்ச தீபம் – கோவில் கோபுரங்களின் மீது ஏற்றப்படும் இந்த தீபம் முன்னோர்களின் நற்கதிக்காக ஏற்றப்படுவது.

அகண்ட தீபம் – மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம். திருவண்ணாமலை, சபரிமலை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட ஸ்தலங்களில் ஏற்றப்படும் இந்த அகண்ட தீபம் மக்களின் மீது தெய்வங்களின் அருளை பாலிக்கிறது.

மாவிளக்கு தீபம் – நோய் நொடிகள் தீரவும், வேண்டுதல்களை நிறைவேற்றவும் மாவிளக்கு செய்து ஏற்றப்படும் தீபம்.

Edit by Prasanth.K