1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (18:32 IST)

திருவண்ணாமலையில் மகாதீபம்! – விண்ணை பிளந்த ‘அரோகரா’ கோஷம்!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் ‘அரோகரா’ ‘நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பி மகாதீபத்தை வணங்கினர்.



இன்று திருக்கார்த்திகை திருநாளில் பிரபலமான பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அதிகாலையே பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதையடுத்து திரளான பக்தர்கள் மகா தீபத்தை காண காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர்.

மாலை பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமூர்த்திகளை வணங்கினர். அதையடுத்து திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை பக்தர்கள் ‘அரோகரா’ ‘நமசிவாய’ கோஷங்கள் முழங்க வணங்கி வேண்டினர்.

Edit by Prasanth.K