புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (17:08 IST)

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்...

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் பச்சை நிற பவர் பட்டன் கொண்டிருக்கும் புசிய ஸ்மார்ட்போன் X ஆன்டெனா வடிவமைப்பு கொண்டுள்ளது. 
 
முன்னதாக இந்க ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ராம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 2160x1080 FHD ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.
 
எனினும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரத்தில் தெரியவரும் என தெரிகிறது.