நம்பர் 1: சாம்சங் சாம்ராஜ்ஜியத்தை அடியோடு அழித்த சியோமி!
இந்தியா சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்க, செலுத்தி வந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி.
ஆம், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதனை கவுன்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் சாம்சங் தனது இரண்டாம் இடத்தை ஓப்போ, விவோ மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளது.
சியோமி, விவோ, ஓப்போ உள்பட பல நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த ஆண்டுகளில் அதிக அளவு வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக விற்பனையில் கொடிக்கட்டி பறந்த சாம்சங் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியே.
ஸ்மார்ட்போனில் பல சேவைகளையும், விதவிதமான ஸ்மார்ட்போன் மாடல்களையும் குறைந்த விலைக்கு வழங்குவதே சியோமி முதலிடத்தை பிடித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
மற்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் வசதிகளை தனது போன்களில் வழங்க முடியாமல் சாம்சங் நிறுவனம் தவித்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மையே.