திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (15:34 IST)

மோட்டோரோலாவின் ’மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம்...

உலகின் ஃபேமஸான ஒரு செல்பொன் நிறுவனம்தான் மோட்டோரோலா. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மாடல் செல்போன்களும் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்நிறுவனம் ரேசர் ஸ்மார்ட்போனில் மடிக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இதில் தனகென்றே சில காப்புரிமை விஷயங்களையும் உள்ளடக்கி உள்ளது.
அதாவது இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை லெனோவாவின் மோட்டோரோலா பிராண்டு லேசர் சீரீஸ்தான் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது. 
 
இது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பிரத்யேகமான மடிக்கக்கூடிய தோற்றத்தின் அடிப்படையில்தான் காப்புரிமை பற்றிய தகவல் இடம் பெறும் என தெரிகிறது.
 
மோட்டோரோலா ஸ்மார்ட் போனில் ரேசர் பெயர் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இதன் அமைப்பு பார்க்க ரேசர் போலவே காணப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,07, 107  என கூறப்பட்டிருக்கிறது. 
 
இது விற்பனையில் சாதனை படைக்கும் என்றும், இளைஞர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்று தெரிகிறது.