1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (20:13 IST)

பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கிய வால்மார்ட்

அமெரிக்காவின் வால்மார்ட், பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

 
அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தகமான பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை சுமார் 16 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம், இந்திய ஆன்லைன் நிறுவத்தினை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருப்பது இதுவே முதல்முறை.
 
வால்மார்ட் - பிளிப்கார்ட் இடையிலான பேச்சுவார்த்தை 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. உலகளவில் அனைவரையும் ஈர்க்கும் மிகப் பெரிய ரீடெய்ல் சந்தையாக இந்தியா உள்ளதாக வால்மார்ட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியா டக் மக்மில்லன் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் வால்மார்ட் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.