உக்ரைன் போரால் சரியும் வர்த்தகம்! – தேசிய பங்குசந்தை நிலவரம்!
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து 5வது நாளாக பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உலகளவில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக மும்பை பங்குசந்தை புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 744 புள்ளிகள் சரிந்து 55,169 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 16,425 ஆக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.