விரைவில் வரும் டபுள் கேலக்ஸி: விவரம் உள்ளே!!
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
ஆம், சாம்சங் நிறுவனம் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்11 என்ற பெயரில் இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக உள்ளது.
இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 15,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. இவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.