விலை குறைப்பு எனும் பெயரில் பயனர்களுக்கு காது குத்தும் சாம்சங்?
விலை குறைப்பு எனும் பெயரில் சாம்சங் நிறுவனம் செய்துள்ள வியாபார யுக்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை கடந்த ஜனவரி மாதம் ரூ. 22,499 என்ற விலை அறிமுகம் ஆனாது. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இதன் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது விலை குறைப்பதாக் அறிவித்து மீண்டும் அறிமுக விலைக்கே இந்த ஸ்மாட்போனினை விற்பனைக்கு வைத்துள்ளது. புதிய விலை குறைப்பு ஆன்லைன் விற்பனை வலைதளங்கள் மற்றும் சாம்சங் இந்தியா இ ஸ்டோரில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.