1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (10:29 IST)

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு!

சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் கேலக்ஸி C7 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ததது. துவக்க விலையாக ரூ.27,990 இது விற்பனை செய்யப்பட்டது. 
 
அதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.3090 வரை விலை குறைப்பு செய்யப்பட்டது. தற்போது மீண்டும் 2500 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பேடிஎம் வலைத்தளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கேலக்ஸி ரூ.22,400க்கு C7 Pro விற்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி C7 Pro சிறப்பம்சங்கள்:
 
# 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 4, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட் 
# 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.9
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
# கைரேகை சென்சார், 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்