விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்....

Last Updated: வியாழன், 8 மார்ச் 2018 (14:47 IST)
நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட்டு முன்னிலை பெருவதற்கு உழைத்து வருகிறது. அவ்வப்போது ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகளையும் வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில் 3ஜிபி ராம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மீது ரூ.1,500 சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறுகிய கால சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:
 
# 5.5-இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D திரை
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# 16 எம்பி பிரைமரி கேரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட்
# கைரேகை சென்சார், 3000 எம்ஏஎச் பேட்டரி
 
3 ஜிபி ராம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்வர் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :