புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (18:12 IST)

ஆர்பாட்டமே இல்லாமல் அசத்தலாய் வந்த சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் அன நிலையில் தற்போது கூடுதல் மெமரியுடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED 720x1260 பிக்சல் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 பிராசஸர், மாலி-ஜி71 ஜி.பி.யு., 
# ஆண்ட்ராய்டு பை ஒ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. 
# 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி, 
# 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 
# பின்புறம் 25 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
# 5 எம்.பி. டெப்த் சென்சார் 
 
விலை மற்றும் நிற விவரம்: 
1. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15,999 விலையில் கிடைக்கிறது. 
2. கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் கிரஷ் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.
 
குறிப்பு: தற்சமயம் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.