வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:28 IST)

2020-க்கு என்ன இருக்கு? ஒன்பிளஸ் கசியவிட்ட தகவல்!

ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்

2020 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டு  ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இதை உறுதிப்படுத்தும் வகையில் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான வலைதள பக்கங்களின் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வெர்ஷன் ஆகியவை இருக்க கூடும் என தெரிகிறது.