அமேசான் நிறுவனரின் போன் ஒட்டுக் கேட்பு.... சவுதி இளவரசர் மறுப்பு !
உலகில் மிகப் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் செல்போனை ஹேக் செய்து ஒட்டுக் கேட்கப்பட்டதாக இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக பரவலாக செய்தி வெளியானது. இந்நிலையில் இதை சவூதி அரசு மறுத்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சவூதி இளவசர் முகமது பின் சல்மான் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் ஆகியோர் நட்பின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதன்பின் சுமார் 1 மணி நேரத்திலேயே ஜெப்பின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து தகவல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் வெளியாகவும் தகவல் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஜெப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளதாவது : பெசோசின் செல்போனில் இருந்து சவூதி அரசு தகவல்களை எடுத்துள்ளனர். ஜெப்பின் மொபைல் போனை சவூதி அரசு உளவு பார்த்ததை எங்கள் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சவூதி அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.