"பட்டாஸ்" உரிமையை கைப்பற்றியது அமேசான் ப்ரைம் !

papiksha| Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (11:16 IST)
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
இப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷின் அசுரன் படத்தையும் அமேசான் நிறுவனம் "பட்டாஸ்" படத்தையும் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :