ஏறிக்கிட்டே போனா எப்படி?? ரூ.29,000 தாண்டிய தங்கத்தின் விலை!!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்து ரூ.29,000 தாண்டியுள்ளது.
ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை இதுவரை சவரனுக்கு ரூ.2,500-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.28,824 இருந்த நிலையில் இன்று ரூ.192 உயர்ந்து ரூ.29,016 ஆக உள்ளது.
அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.24 விலை உயர்ந்து ரூ.3,627 க்கு விற்பனையாகிறது. அதே போல நேற்று வெள்ளி விலை ரூ.1,400 உயர்ந்து இன்று ரூ.49,000 விற்பனையாகிறது.