நீச்சல்குளத்தில் 300 கிலோ போலித் தங்கம் – 40,000 பேரை ஏமாற்றிய தொழிலதிபர் !
மோசடி செய்த தொழிலதிபரைக் கைது செய்ய போலிஸார் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ போலி தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.எம்.ஏ எனும் வர்த்தக நிறுவனம் பொன்ஸி எனும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் போலியானத் தங்கக்கட்டிகளைக் காட்டி 40,000 வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளனர். இது சம்மந்தமாகப் போலிஸுக்குப் புகார் வரவே அந்நிறுவனத்தின் அதிபர் மன்சூர் கான் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஐ.எம்.ஏ க்ரூப்பின் இயக்குனர்கள் அதிகாரிகள் என 25 பேரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளையும் முடக்கியுள்ளனர். இதனிடையே இந்தியா வந்த மன்சூர் கானை டெல்லி விமானநிலையத்தில் கைது செய்த அமலாக்கத்துறை அவரது வீட்டில் சோதனை நடத்திய போது அங்குள்ள நீச்சல்குளத்தில் 300 கிலோ போலித் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றியுள்ளனர்.