ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (17:41 IST)

ரூ.25,400 வரை தள்ளுபடி: பிளிப்கார்ட் மன்த் எண்ட் ஆஃபர்!

பிளிப்கார்ட் நிறுவனம் மன்த் எண்ட் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாகவே குறைக்கப்பட்டுள்ளது. 

 
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது மாத இறுதியை கோலாகலமாக்க கொண்டாட Month End Mobile Fest ஆஃபரை வழங்கியுள்ளது. நாளையோடு முடியும் இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள் மீது பல ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக ஐபோன், நோக்கியா, ஹானர், ரெட்மி, சாம்சங், ரியல்மி சி1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் போது 5% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
ஸ்மார்ட்போன் ஆஃபர்: 
1. ரூ.91,900 மதிப்புள்ள ஐபோன் எக்ஸ் ரூ.66,499-க்கு விற்கப்படுகிறது. 
2. நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 குறைக்கப்பட்டுள்ளது. 
3. ஹானர், சாம்சங் கேலக்ஸி போன்களின் விலையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
4. சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனக்கு பிரத்யேக எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
5. ரியல்மி சி1, ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது.