புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (18:37 IST)

அம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன?

ஏற்கனவே ஜியோ என்ற பெயரில் களமிறங்கி தொலைத்தொடர்பு துறையை புரட்டி போட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டை டார்கெட் செய்துள்ளது. 
 
ஆம், முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய புதிய வணிகத் தளத்தினை உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஒடிசா முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரிலையன்ஸ் துவங்க இருக்கும் இந்த திட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 3 கோடி வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வணிகர்களாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் போன்று செயல்பட முடியும் என்றும் அதற்கான தொழில்நுட்ப உருவாக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது உள்ள இ காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஆன்லைன் டு ஆப்லைன் வழியில் செயல் படும் வணிகமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தளம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனால், இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையில் முன்னணியில் உள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் சற்று கலக்கத்தில் உள்ளன. தொலைத்தொடர்பு துறையை போன்று ஆன்லைன் வர்த்தகத்தில் மாற்றம் வருமா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.