வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (16:41 IST)

பிக்ஸட் டெபாசிட்… வங்கி திவாலானால்? 5 லட்சம் கியாரண்டி !

வங்கிகளில் நாம் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் கியாரண்டி தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கையான முதலீடு என்றால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவது. இந்த டெபாசிட்களுக்கு ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டிவிகிதம் அளிக்கப்படும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டு டெபாசிட்டை விட வட்டி அதிகம். அதேப் போல நீங்கள் டெபாசிட் செய்த வங்கி திவாலானால் அரசு டெபாசிட் செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும்.

ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த குறைந்த பட்ச தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெபாசிட் செய்பவர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.