வாட்ஸ் ஆப்பில் டிரிபிள் டிக் வந்தால் உங்களுக்கு ஆப்புதான்..
வாட்ஸ் ஆப்பில் மூன்று புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது.
வாட்ஸ் ஆப்பை அரசு கண்காணித்து வருவதாக கூறப்படும் நிலையில் உங்கள் டேட்டில் ஏதேனும் மெசேஜூக்கு மூன்று புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்படுகிறது.
அதே இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை பலருக்கும் தெரியப்படுத்தவும் என சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வருகின்றன.
ஆனால், இந்த தகவல் அனைத்தும் பொய்யானவை இதை நம்ப வேண்டாம் என வாட்ஸ் ஆப் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.