’வாட்ஸ் ஆப்’ தரவுகள் ’திருட்டு போகலாம்’ ! மக்களே உஷார்...
இன்றைய உலகில் சமூக வலைதளங்கள் இல்லாமல் யாருக்குமே பொழுது போகாது. அந்தளவுக்கு இளைஞர்களை அது ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் இந்த சமூக வலைதளங்களில் முக்கியப் பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப் தான். இதன் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை சரியாக ஆய்வு செய்ய வேண்டுமென நாட்டின் முன்னனி சட்ட வல்லுநர்களில் ஒருவர் கருத்து தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபல வக்கீல்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களில் வாட்ஸ் ஆப் செயல்பாடுகளை இஸ்ரேலை சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ.(nso) நிறுவனம் உளவு பார்த்ததாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விசாரிப்பதற்கு நாடாளூமன்றத்தின் சார்பில் இரு குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் வாயிலாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னணி சட்ட நிபுணர் ஒருவர் எச்சரித்து உள்ளார். மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக பணம் செலுத்தும் முறையை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஒருவர் ஆன்லைனில் பியரை ஆர்டர் செய்து பணப்பரிமாற்றின்போது அவரிடம் 88ஆயிரம் ரூபாயை ஒரு கும்பல் அபகரித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.