அமேசான் ஆஃபரை ரிஜெக்ட் செய்ததா ஏர்டெல்?
ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் முதலீடு பற்றி அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தது ஏர்டெல்.
ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜியோ மற்றும் ஃபேஸ்புக் இணைந்த கூட்டணியை சமாளிப்பதற்காக ஏர்டெல் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாக சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்றும், இதுவரை அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.