செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (14:26 IST)

ஏர்டெல் நிறுவன பங்குகளை வாங்குகிறதா அமேசான்? பரபரப்பு தகவல்

ஏர்டெல் நிறுவன பங்குகளை வாங்குகிறதா அமேசான்?
ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் ஜியோ மற்றும் ஃபேஸ்புக் இணைந்த கூட்டணியை சமாளிப்பதற்காக ஏர்டெல் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஏர்டெல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாக சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஜியோ மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவே ஏர்டெல் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது இந்த செய்தி வெளியானதை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது