மணிரத்னத்துக்குக் கீழ் 9 இயக்குனர்கள் – உருவாகும் OTT தொடர்!
இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் புராணங்களின் அடிப்படையில் 9 இயக்குனர்கள் ஒரு தொடரை இயக்க உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில அவர் குறுகிய இடைவெளியில் குறைந்த பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். இந்திய புராணங்கள் ஒன்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரை உருவாக்கியுள்ள அவர் அத்தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக உள்ளார். இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோட்டையும் 9 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குகின்றனர். கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குநர்களாக உறுதியாகியுள்ள நிலையில், மற்ற இயக்குனர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த தொடரின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக அளிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.